MARC காட்சி

Back
சேரன்மகாதேவி பக்தவத்சலப் பெருமாள் கோயில்
245 : _ _ |a சேரன்மகாதேவி பக்தவத்சலப் பெருமாள் கோயில் -
246 : _ _ |a பக்தவத்சலப் பெருமாள்
520 : _ _ |a கி.பி.12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியர், விசயநகரர் காலத்தைச் சேர்ந்த இக்கோயில் மிகப்பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த இக்கோயில் திருமாலுக்காக எடுப்பிக்கப்பட்டதாகும். அழகிய பெரிய திருமதிலும், திருச்சுற்று மாளிகையும் கொண்டுள்ளது. ஆற்றினை ஒட்டி அழகிய தூண்களைக் கொண்ட மண்டபம் ஒன்று அமைந்திருக்கிறது. இம்மண்டபம் இறைவனின் தீர்த்தவாரியின் போது தங்குமிடமாக இருக்கலாம். இக்கோயில் கருவறை விமானம் கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், மேற்பகுதி சுதையினாலும் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று தளங்களைக் கொண்டதாக உள்ளது. தளங்களில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. முக மண்டபத்திலும் மகாமண்டபத்திலும் உள்ள தூண்களில் பலவித புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் வைணவ சமயத்தைச் சார்ந்தவையாக இருப்பினும் ஒன்றிரண்டு சிவபெருமானைக் குறித்தவையாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சுற்று மாளிகை தூண்களோடு அமைந்துள்ளது. இக்கோயில் கருவறை விமானத்தின் கோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. பாண்டியர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக கருவறை விமானம் விளங்குகிறது. விமானம் எட்டுப்பட்டையுடன் கூடிய திராவிட பாணியில் அமைந்துள்ளது. மண்டபங்கள் விசயநகரர் காலத்தில் எடுப்பிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இம்மண்டபங்களில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் பலவற்றை நோக்கும் போது அவை பல விசயநகரக் கோயில் மண்டபங்களில் காணப்படுவது போன்றே உள்ளன.
653 : _ _ |a சேரன்மகாதேவி, பக்தவத்சலப் பெருமாள் கோயில், பாண்டியர், விசயநகரர் கலை, திருநெல்வேலி கோயில், சேரன்மகாதேவி பெருமாள் கோயில், தாமிரபரணி ஆற்றங்கரை கோயில், தாமிரபரணி ஆற்றங்கரை பெருமாள் கோயில்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
905 : _ _ |a கி.பி.14-ஆம் நூற்றாண்டு / பிற்காலப் பாண்டியர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 800 ஆண்டுகள் பழமையானது. பாண்டியர், விசயநகரர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது.
914 : _ _ |a 8.67606355
915 : _ _ |a 77.55781174
916 : _ _ |a பக்தவத்சலப் பெருமாள்
923 : _ _ |a தாமிரவருணி
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறை விமானத்தின் தளங்களில் சுதையாலான திருமால் சிற்பங்கள் காணப்படுகின்றன. சிம்மம் தாங்குதளம் கொண்ட தூண்கள் உள்ளன. மேலும் தூண்களில் அடியவர், அரசன், அரசியார், பணிப்பெண், இராமன், இலக்குவன், சீதை, வீரன், அருச்சுனன், சிவன், அனுமன், கண்ணாடிப்பெண், பணிப்பெண், முதியவர் ஆகிய பல புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மண்டபங்களிலுள்ள தூண்களில் உள்ள இச்சிற்பங்கள் மிகுந்த எழில் வாய்ந்தவையாக விசயநகரர் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
932 : _ _ |a கி.பி.12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியர், விசயநகரர் காலத்தைச் சேர்ந்த இக்கோயில் மிகப்பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த இக்கோயில் திருமாலுக்காக எடுப்பிக்கப்பட்டதாகும். அழகிய பெரிய திருமதிலும், திருச்சுற்று மாளிகையும் கொண்டுள்ளது. ஆற்றினை ஒட்டி அழகிய தூண்களைக் கொண்ட மண்டபம் ஒன்று அமைந்திருக்கிறது. இம்மண்டபம் இறைவனின் தீர்த்தவாரியின் போது தங்குமிடமாக இருக்கலாம். இக்கோயில் கருவறை விமானம் கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், மேற்பகுதி சுதையினாலும் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று தளங்களைக் கொண்டதாக உள்ளது. தளங்களில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. முக மண்டபத்திலும் மகாமண்டபத்திலும் உள்ள தூண்களில் பலவித புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் வைணவ சமயத்தைச் சார்ந்தவையாக இருப்பினும் ஒன்றிரண்டு சிவபெருமானைக் குறித்தவையாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சுற்று மாளிகை தூண்களோடு அமைந்துள்ளது. இக்கோயில் கருவறை விமானத்தின் கோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. பாண்டியர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக கருவறை விமானம் விளங்குகிறது. விமானம் எட்டுப்பட்டையுடன் கூடிய திராவிட பாணியில் அமைந்துள்ளது. மண்டபங்கள் விசயநகரர் காலத்தில் எடுப்பிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இம்மண்டபங்களில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் பலவற்றை நோக்கும் போது அவை பல விசயநகரக் கோயில் மண்டபங்களில் காணப்படுவது போன்றே உள்ளன.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a அகத்தீஸ்வரர் கோயில், காசிபநாதர் கோயில், கிருஷ்ணசுவாமி கோயில், தென்னழகர் கோயில், நீலமணிநாதசுவாமி கோயில், அம்மைநாதர் கோயில்
935 : _ _ |a திருநெல்வேலி-பாபநாசம் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள அம்பாசமுத்திரத்திலிருந்து சில கி.மீ. தொலைவில் சேரன்மகாதேவி அமைந்துள்ளது. அம்பாசமுத்திரத்திலிருந்து பேருந்தில் சேரன்மகாதேவி செல்லலாம்.
936 : _ _ |a காலை 7.00-09.30முதல் மாலை 5.30-7.30 வரை
937 : _ _ |a அம்பாசமுத்திரம்
938 : _ _ |a அம்பாசமுத்திரம், தென்காசி, திருநெல்வேலி
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a அம்பாசமுத்திரம், தென்காசி, திருநெல்வேலி விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000062
barcode : TVA_TEM_000062
book category : வைணவம்
cover :
Primary File :

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_திருமதில்-0001.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_விமானம்-0002.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_தாமிரவருணி-0003.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_மண்டபம்-0004.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_கோயில்-வளாகம்-0005.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_தூண்-0006.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_ஆறு-0007.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_மண்டபம்-0008.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_கலசம்-0009.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_நுழைவாயில்-0010.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_சிம்மத்தூண்-0011.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_சிம்மத்தூண்-0012.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_சாளரம்-0013.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_கருவறை-0014.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_தூண்-0015.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_தூண்-கல்வெட்டு-0016.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_சுவர்-கல்வெட்டு-0017.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_திருமதில்-0018.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_விமானம்-0019.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_முகமண்டபம்-0020.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_யானை-படிகள்-0021.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_முகமண்டபம்-தூண்கள்-0022.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_திருச்சுற்று-மாளிகை-0023.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_சுவர்-கல்வெட்டு-0024.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_கருடன்-0025.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_ஆண்-0026.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_பூதேவி-0027.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_ஆண்டாள்-0028.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_அடியவர்-0029.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_சீதை-0030.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_இராமன்-0031.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_அனுமன்-0032.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_பணிப்பெண்-0033.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_யானை-குதிரை-0034.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_இலக்குவன்-0035.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_அரசன்-0036.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_அரசன்-0037.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_பெண்-0038.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_பெண்-0039.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_பெண்-0040.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_அர்சுனன்-தவம்-0041.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_வேடஉருவில்-சிவன்-0042.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_கண்ணாடிப்பெண்-0043.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_முதியவர்-0044.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_அடியவர்-0045.jpg

TVA_TEM_000062/TVA_TEM_000062_பக்தவத்சலப்பெருமாள்-கோயில்_ஒரு-முலை-நங்கை-0046.jpg